மகிழ்ச்சி என்பது யாருக்குக் கிடைக்கிறது?
எல்லா வயதிலும், தரத்திலும் சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலர் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஏன்? பலர் மகிழ்ச்சியாக இல்லை.
மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதில்லை! நமக்குள்ளேயே இயல்பாக மலர்வது.
உண்மையில் மனநிறைவுதான் மகிழ்ச்சி! நேற்றைய இழப்புகளையும், தோல்விகளையும் பற்றிக் கவலைப்படாமல் வாழப் பழகுவதுதான் மகிழ்ச்சி!
மற்றவர்களிடம் இருப்பதற்கெல்லாம் ஆசைப்பட்டு ஏங்காமல், நமக்கு இன்று இப்போது இருக்கும் சுகங்களை அனுபவிப்பதுதான் மகிழ்ச்சி! ஏன் இன்றைய துக்கங்கள்கூடத் தற்காலிகமானவைதான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் மகிழ்ச்சி!
உண்மையில், ஆசை கூடாதா? ஆசையே இல்லாமல் வாழ முடியுமா? ஆசையே இல்லாமல் நாம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்க முடியுமா?
வாழ்வின் அடித்தளமே ஆசைதான்! ஒவ்வொரு நொடியும் நாம் இன்னும் சிறப்பாக வாழவேண்டும் என்கிற ஆசைதான் நம்மை இயக்குகிறது!
இன்னும் ஒருபடி மேலே! இதுதான் தனிமனித வளர்ச்சிக்கே அடித்தளம்.
இந்த ஆசைக் கனவுகள்தான் இன்று நமது உடனடித் தேவை
இதைத்தான் இன்றைய குடியரசுத் தலைவர் தொடங்கி, உளவியல் வல்லுநர்கள் வரை பலரும் வலியுறுத்துகிறார்கள்!
எனவே மனநிறைவும் ஆசைக்கனவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல! எதிரானவை அல்ல!
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்போம். அதே நேரத்தில் இதைவிடச் சிறப்பான வாழ்வைப்பெற ஆசைப்படுவோம். இன்னும் செழிப்படைய கனவும் காண்போம்!
மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் இது!
ஆசைப்படலாம். பேராசைப் படக்கூடாது.
ReplyDeleteஅப்படித் தானே????