14 April 2010

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! ! !
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

மனிதமும் உலகமும் காப்போம், 


10 April 2010

குறைகள் தடைகள் அல்ல!     (உடல் ஊனம், வறுமை, குடும்பச் சூழல் போன்றவை நமது வளர்ச்சிக்குத் தடைச் சுவர்களாக இருக்க முடியுமா?) 
நாம் மட்டும் இன்னும் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தால்... கொஞ்சம் உயரமாய் இருந்திருந்தால்...
கொஞ்சம் சிவப்பாய் அழகாய் இருந்திருத்தால்...
கொஞ்சம் நன்றாகப் படித்திருத்தால்...
அவளைப்போல் நீண்ட முடியோடு இருந்தால்...
இப்படி ஏராளமான ஏக்கங்கள்!
மற்றவர்களைவிடத் தாம் மோசமாக இருப்பதால்தான் நம்மால் முன்னேற முடியவில்லை என்று நினைக்கிறோம்!
ஏங்குகிறோம்! புலம்புகிறோம்!
ஆனால் இது உண்மையா?
இந்தக் குறைகள் எல்லாம் தடைகளா? இந்தக் குறைகள் நம்மை வெற்றி பெறவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றனவா?
இந்தக் குறைகளை எல்லாம் மீறி வாழ்வில் வெற்றி கண்டவர்கள் இல்லையா?
உலக அழகி கிளியோபாட்ரா ஒரு கறுப்பழகிதானே!
உலகைச் சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் குட்டையானவர்தானே! அவரைவிடக் குட்டையா நாம்?
ஸ்டாலினும், ஆபிரகாம் லிங்கனும் பணக்காரக் குடும்பத்திலா பிறந்தவர்கள்? ஏழைகள்தானே!
நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்ன ‍அமெரிக்காவில் பிறந்தவரா? நர்சரிப் பள்ளியில் ஆங்கிலம் படித்தாரா?
உடல் ஊனங்களைக்கூட வென்று சாதனை படைப்பவர்கள் எத்தனை பேர்?
மிகப்பெரிய உலகக் கவிஞரான மில்டன் ஒரு பார்வையற்ற மனிதர்!
‍ஹெலன் கெல்லர் என்ற பெண்மணியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்குப் பேச்சு வராது! காதும் கேட்காது! பார்வையும் இல்லை.
இந்த உடல் ஊனங்கள் எல்லாவற்றையும் அவர் வென்று முன்னேறிச் சாதனை படைக்கவில்லையா?
மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட பலர் மீண்டும் நலம்பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டவில்லையா? நடக்கவே கூடாது என்று மருத்துவர்கள் போட்டத் தடையை மீறி ஒலிம்பிக் போட்டியில் ‍ெவற்றி கண்டவர்கள் இல்லையா?
காலையே இழந்த பிறகும், செயற்கைக் காலை வைத்துக்கொண்டு நடனத்துறையில் வெற்றி கண்ட அபூர்வத் தமிழ்ப்பெண்ணை நாம் நம் வாழ்நாளில் பார்த்ததில்லையா?
இவர்கள் எல்லாம் வரலாற்றில் என்றோ ஒருநாள், எங்கோ ஓர் இடத்தில் அத்தி பூத்ததுபோல் தோன்றுபவர்கள்! ஒரு சராசரி மனிதரால் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமா? என்று சிலர் முணுமுணுக்கக்கூடும்.
சிகரங்களைத் தொட்டவர்களும், தொடுபவர்களும் ஒரு சிலராக இருக்கக்கூடும்! ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி முன்னேறுபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்!
கிராமங்களில் ஏழ்மைச் சூழலில் பிறந்து உழைத்து, முன்னேறியவர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள்!
வணிகத்துறையில்! அரசுப்பணிகளில்! கல்வித்துறையில்! திரைப்படத்துறையில்!
எந்தத்துறையில் கிராமத்து மண்வாசம் பரப்பவில்லை? எந்தத்துறையில் வறுமை வளமையாக மாறி ஒளி வீசவில்லை?
எனவே குறைகள் எல்லாம் நிறைவாக மாறக்கூடியவைதான்! தடைகள் எல்லாம் தாண்டக் கூடியவைதான்! நம்புவோம். வாழ்வில் முன்னேற்றம் காண்போம்.


வாழப் பழகுவோம் தொடரும்...

07 April 2010

நம்மைக் காதலிப்போம்


    
  நம்மை நமக்கே பிடிக்குமா? இது என்ன  அர்த்தமற்ற கேள்வி என்று பலரும் நினைக்கலாம்.
ஆனால் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பாருங்கள். நம்மை நமக்கு முழுமையாகப் பிடிப்பதில்லை.
நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை.
நான் உயரமாக இல்லை.
நான் கருப்பாக பிறந்து தொலைந்து விட்டேன்.
நான் இன்னும் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கலாம்!
எனக்கு அவனைப் போல் படிப்பு வருவதில்லை..
என் முடி மட்டும் ஏன் கொட்டிப் போகிறது?
இப்படி எத்தனையோ புகைச்சல்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
நம்மீது நாமே தேவையில்லாமல் வளர்த்துக் ‍கொண்டே வரும் இந்த வெறுப்புகள் காலப்போக்கில் பூதாகரமான எதிர்மறைச் சிந்தனைகளுக்கு வித்திடுகிறது.
நம்மை ‍ெவறுக்கும் நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களை வெறுக்கிறோம். பெற்றோரை, பிள்ளைகளை வெறுக்கிறோம். சமூகத்தை வெறுக்கிறோம்.
வாழ்க்கையையே வெறுத்துத் தற்கொலை வரை பயணிக்கிறோம்.
ஆனால் நாம் நம்மை வெறுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
நாம் ஒவ்வொருவரும் உண்மையில் ஓர் வித்தியாசமான அற்புதமான படைப்பல்லவா? கடவுளின் ஒரு வித்தியாசமான வெளிப்பாடு அல்லவா?
நம்மைப் போன்றே எல்லாவிதத்திலும் ஒத்து அ‍மைந்த மற்றொரு பிறவி இருக்கிறதா?
இரட்டைக் குழந்தைகள்ககூடக் காலப்போக்கில் வளரும் சூழலில் மாறுபட்டு போவதில்லையா?
ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பதும் செயல்படுவதும்தானே உண்மையில் இயற்கையின் அழகு. உயிர்ப் படைப்பின் சிறப்பு.
எல்லாரும் ஒரே மாதிரியாக, ஒரே வகையான உயரத்தில், நிறத்தில் வாழும் ஒர் உலகைக் கற்பனை செய்து பார்ப்போம்.
அந்த எந்திரமயமான உலகமும் வாழ்க்கையும் உங்களுக்குப் பிடிக்குமா? அந்த எத்திரங்களில் ஒன்றாக நாமிருந்தால் வாழ்க்கை
எப்படி இருக்கும்?
நாம் எந்திரங்கள் இல்லை. வித்தியாசமான இயற்கைப் படைப்புகள். ஒவ்வொருவரும் அற்புதமான ஒரு படைப்பு. இயற்கையின் ஓர் அங்கம். இறைவனின் ஒரு கொடை! ஏன்? இறைவனின் ஒரு வெளிப்பாடு.
இந்த வாழ்க்கைப் பாடத்தை நாம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருவோம். நாம் குறைபாடுகள் நிறைந்தவர்கள் என்று கருதி வருத்தத் தேவையில்லை.
நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் என்று உணர்ந்து மகிழ்வோம்.
நம்மை நாமே எக்காரணத்துக்காகவும் வெறுக்க வேண்டாம்.
நமது நிறத்தை, உயரத்தை, வடிவத்தை, தலைமுடியை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்!.

நம்மைப் போலத்தான் மற்றவர்களும். எனவே அவர்களின் வேறுபாடுகள் வித்தியாசங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

நம்மையும், நம் சுற்றத்தினரையும், சூழலையும் காதலிக்கப் பழகுவோம்.வாழப் பழகுவோம் புத்தகத்தில் இருந்து சுட்டது நன்றி வேலன்.பா


தொடரும்...

02 April 2010

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்-6 விஜய் ஸ்பெஷல்


  • எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்..

  • வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...

  • வேட்டைக்காரன் பஞ்ச்:ஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்... படம் பார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.

  • வேட்டைக்காரன் பாடல்:”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

  • ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?மற்றொருவர்: யாரோ வேட்டைக்காரன் படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

இது ஓல்டு பட் கோல்டு :
  • போலீஸ்: இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?
  • கைதி: படம் பார்க்கணும்...
  • போலீஸ்: சரி வில்லு போகலாமா ?
  • கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...
இந்தக் ஜோக்ஸ்  யார் மனதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே........