மனைவி:"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க?"
கணவன்: "நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே!" :)) :))
***************************************************
ஒரு யானை ஒரு எறுமபைப் பொண்ணு பார்க்க போனது. யானை எறும்புப்பெண்ணின் சிற்றிடை கண்டு மயங்கி கட்டினா அதைத் தான் கட்டுவேன்னு நாலு காலிலேயும் நின்னது. ஆனா அந்த எறும்பு மறுத்து விட்டது. கேட்டதற்கு அந்த எறும்பு சொன்னது என்னவென்றால்,
பையனுக்கு கை நீளம் !
***************************************************
ஒரு யானைய நாலு எறும்பு சேர்ந்து கடிக்கலாம்
ஆனா,
ஒரு எறும்ப நாலு யானை சேர்ந்து கடிக்கலாமோ ?!?
***************************************************
பல மனிதர்களுக்கு சிங்கபல் உண்டு;
ஆனால்,
ஒரு சிங்கத்துக்குக் கூட மனித பல் கிடையாது
***************************************************

ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.. !
நண்பா !, ஏன்னு சொல்லுங்க பாக்கலாம் ??
ஏன்னா, தொல்வி அடைஞ்ச ஆண்களுக்குப் பின்னால போக அவங்க விரும்ப மாட்டாங்க....
நல்லாயிருக்கு!
ReplyDelete