அறிவு, கல்வி, படிப்பு எல்லாவற்றையுமே நாம் கிட்டத்தட்ட ஒன்று என்கிற பாவனையில்தான் நினைத்துக் கொள்கிறோம். "அவரு ரொம்பப் படிச்சவரப்பா" என்று சொல்கிறோம். படித்தவர்களெல்லாம் அறிவாளிகள் என்கிற நினைப்பு இங்கே தொக்கி நிற்கிறது.alphabet
புத்தகப் புழுக்கள் நாட்டில் ஏராளம்! சில பேர் எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் அலைகிறார்கள்! நமது பிள்ளைகள் கூட எப்போதும் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்கிறோம்! (அவர்கள் புத்தகத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறோமா என்பது வேறு கேள்வி)
இன்று நாட்டில் படித்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்! ஏராளமான பட்டங்களை மேலும் மேலும் வாங்கிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
நமது கேள்வி ஒன்றுதான். இப்படிப் படித்தவர்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெறுகிறார்களா? வாழத் தெரிந்தவர்கள் என்பதற்கு நாம் சுட்டும் படிப்பு ஓர் அளவுகோலாக முடியுமா? படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா?
நாம் படிக்கும் பாடப் புத்தகம், பொது அறிவு நூல்கள், இலக்கியங்கள், செய்தித்தாள்கள் எல்லாமே வெவ்வேறு வகையான செய்திகளின் தொகுப்பு.
இச்செய்திகளை நாம் தேர்வு நேரத்தில் ஒரளவுக்குச் சரியாகச் சொல்லித் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால் நாம் தேறிவிடுகிறோம், பட்டத்தையும் வாங்கி விடுகிறோம்.
அறிவாற்றல் என்பது இதையும் தாண்டியது!
இன்னும் ஒரு படி மேலே போகலாம்! நாம் படித்தவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருப்போம்! நன்றாக வரிசைப்படுத்தி நினைவில் கூட வைத்திருப்போம்!
யார் எந்த நேரத்தில் எந்த விஷயம் பற்றிக் கேட்டாலும் உடனே இப்படிப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியும்! தகவலைத் தர முடியும்! "நடமாடும் நூல் நிலையம், எல்லாம் தெரிந்த மனிதர், விவரமான ஆள்" என்றெல்லாம் இவர்களை நாம் குறிப்பிடுகிறோம். இப்படிப்பட்டவர்களை நாம் அறிவாளிகள் என்று ஒப்புக்கொள்ளலாமா? அப்படியானால் நம்ம வீட்டுக் கணக்குப் பிள்ளைகள் எல்லாம் அறிவாளிகளா? அலுவலக ஊழியர்கள் எல்லாம் அறிவாளிகளா?
நூலகர்கள் ஏராளமான நூல்களையே நமக்கு அடையாளம் காட்டுவார்கள்! இன்றைய கணிப்பொறிகள் இன்னும் அதகமான செய்திகளைத் தொகுத்து வைத்திருக்கின்றன! கணிப்பொறிகள் அறிவாளிகளா?
அறிவு, அறிவாற்றல், புத்திசாலித்தனம் என்பது உண்மையில் இந்த எல்லைகளைக் கடந்தது!education
படித்துக் தெரிந்து கொள்வது அறிவின் ஒரு பரிமானம். பார்த்து, கேட்டு, பழகித் தெரிந்து கொள்வதும் அறிவின் மற்றொரு பரிமாணம்!
நாம் தெரிந்துகொண்ட செய்திகள் சரியா? தவறா? என்று மதிப்பிட்டு உண்மையைக் கண்டறிவதும் அறிவின் மற்றொரு கூறு! இவ்வாறு பகுத்தறிந்த செய்தியை உரிய நேரத்தில், உரிய விதத்தில் பயன்படுத் தெரிந்திருப்பது அறிவின் நிறைவான பகுதி!
அறிவு ஒரு கருவி! நம்மைக் காக்கும் கருவி! நம்மை வளர வைக்கும் கருவி! இத்தகைய அறிவை நமது கல்வி நமக்குத் தந்திருக்கிறதா? நாம் முயன்று இத்தகைய அறிவை வளர்த்து கொண்டிருக்கிறோமா?
நமது குழந்தைகள் இத்தகைய அறிவைப் பெறுகிறார்களா? அதை நம் ஆசிரியப் பெருமக்கள் உறுதி செய்கிறார்களா? படிக்கும் பருவத்தோடு இத்தகைய அறிவைப் பெறும் முயற்சியை நாம் நிறுத்திக் கொள்ளலாமா? அப்படி நிறுத்திக் கொள்ள முடியுமா?
வாழ்நாள் எல்லாம் நம்முடைய அறிவு என்ற கருவியை நாம் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டாமா? அறிவுத் தேடல் ஒரு தொடர் முயற்சியாக அமைய வேண்டாமா? அதற்கு நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இதைப்பற்றி நம் சிந்தனைத் தேடல் தொடரட்டும்.
தலைப்பு என்னமோ நன்றாகத்தான் இருக்கிறது... வாசிக்கத்தான் கடுப்படிக்கிறது.
ReplyDeleteஇடைவெளி விட்டு பந்தி பிரித்து எழுதினால் நனறாக இருக்கும்