19 June 2010

வாழ்க்கை என்றால் என்ன ?


டிஸ்கி - இந்த பதிவை படித்து முடிக்கும் பொது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவம், உணர்வு , வாழ்க்கையை பற்றிய பார்வை புதியதை இருக்கும்.இனிமேல் நீங்க பார்க்கும் உலகம் வாழ்க்கை மாறக்கூடும்.கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு ஒரு நல்ல ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.

பொதுவாக நான் இந்த வாழ்க்கை பற்றிய ஒரு பயிற்சி கொடுக்கும் பொது
தயவு செய்து கண்களை முடி நான் சொல்வதை கேளுங்க என்று சொல்வேன்
( இப்போ நீங்க கண்ணை மூடினால் படிக்க முடியாது , ஆதலால் அமைதியாய் மனசு லேசாக இருக்கும் பொது படிக்கவும் )

என்னடா இவன் இப்படி சொல்றானு நினைக்காதிங்க பதிவைபடித்து முடிங்க வாழ்க்கை என்றால் என்ன? பதில் நிச்சியம்

நீங்க அதிகாலை எழும் பொது உங்களால எழ முடியல ...

நீங்க உங்க விட்டுல , உங்க பெட்ரூல படுத்து இருக்கீங்க ...
உங்கள் அம்மா, மனைவி அல்லது உங்கள் உங்கள் அன்புக்கு உரியவங்க வந்து எழுபுறாங்க முடியல ....

நீங்க பேசுறது அவங்களுக்கு கேட்கல ...

எல்லாம் அழுறாங்க, உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் வராரு கைகளை புடிச்சி பார்த்து ஏதோ உங்க அப்பா/ அம்மா/ மனைவிகிட்ட சொல்றாரு..
நீங்க சொல்றது யாருக்கும் கேட்கல ... உங்களால அசைய முடியல ...

ஒரே போன் மேல போன் ...
சொந்தம் பந்தம் எல்லாம் வருது, உங்க அத்தை மாமா, ஆபீஸ் மக்கள், பக்கத்து வீட்டு மக்கள் எல்லாரும் வராங்க .. எல்லாரும் கண்கள் வலிக்க அழுவுறாங்க..
உங்களக்கு ஒன்றும் புரியவில்லை

உங்களுக்கு மாலைகள் போடுகிறார்கள் .. உங்க கட்டில் பக்கத்தில் உங்கள் அன்புமிக்க தம்பி/தங்கைகள் அம்மா அப்பா எல்லாரும் ஒரே சத்தம் ஒரேஅழுகை

காரணம் உங்கள் உயிர் பிரிந்தாயிற்று ....

பக்கத்துவிட்டுக்காரன் - நல்ல மன்சன்யா தொந்தரவே செய்ததே இல்லை ... சின்ன வயசு ...
ஆபீஸ் மேனேஜர் - நல்ல வேலை பார்ப்பான் இப்போ எவன வச்சி வேலை பார்த்து ப்ராஜெக்ட் முடிக்கிறது , இவனுக்கு தன் எல்லாம் தெரியும் ...
கடன்காரன் - பாவி பய வாங்கின கடன தராம போய்ட்டான்
கடன் வாங்கினவன் - நல்ல வேலை இவரு நமக்கு கொடுத்த கடன் யார்ருக்கும் தெரியாது ...
குடும்பம் - நேத்து வர நல்ல தான் இருந்தார் வேலை வேலை என்று இருந்தாரு, நல்ல மனுஷன்.
நேத்து காப்பி கேட்டு சண்டை போட்டு இப்படி காப்பி கூட குடிக்காம போய்டிங்களே ...

ஓர சோகம் நீங்கள் ஹெல்ப் செய்தர்வர்கள் உங்களை நல்லவர்கள் என்றும், நீங்கள் ஹெல்ப் செய்யாதவர்கள் உங்களை போய் தொலைஞ்சன் டா என்றும் சொல்வது ... உங்கள் காதில் விழுது

உங்களை குளிக்க வைத்து மாலை போட்டு அப்படியே எல்லாரும் வந்து பார்த்து அழுத பின்பு உங்களை ஏற்றி கொண்டு சுடுகாட்டுக்கு போய் எரித்தோ புதைத்தோ உங்கள் வழக்க படி முடிந்தாயிட்ட்று ..

அடுத்த நாள் காலை சொந்தம் பந்தம் எல்லாம் காலி..

உங்கள் விடு உங்கள் மனைவி மக்கள் அப்பா அம்மா தம்பி அண்ணன் தங்கை ...
இவர்கள் மட்டும் உங்கள் விட்டு சென்ற நினைவுகளோட ...

ரெண்டு நாள் கழித்து ... உங்கள் போட்டோ மாலை மாற்றி நடு விட்டில் இருக்க..

தம்பி, உங்கள் மனைவி, மக்கள், அண்ணன், தங்கை, அக்கா எல்லாரும் அவர் அவர் வேலையை பார்க்க கிளம்பியாச்சு ... ஆபீஸ் போறவங்க ஆபீஸ் .... ஸ்கூல் காலேஜ் போறவங்க காலேஜ் ... நீங்கள் இல்லாமலும் உலகம இயங்கும் ...
நீங்கள் மட்டும் தான் உங்கள் ஆபீஸ் கட்டிக்கொண்டு காப்பற்றுவதாக நினைத்க்கொண்டு இருந்த நீங்கள் ... உங்களக்கு அதிர்ச்சி தான் ...
நீங்க இல்லாம உலகம சுற்றும் ... நீங்க இல்லாம மக்கள் வேலையை செய்வார்கள்...

அப்போ அப்போ உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள் உங்கள் நினைவுகளை அதுவும் பசுமையான நினைவுகளை சுமப்பார்கள் ...

உங்கள் மனைவி அப்பா அம்மா, பிள்ளைகள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் ஒரு மாதமாவது உங்கள் நினைவில் இருந்து வருந்துவார்கள் ...
அதுவும் நீங்கள் அவர்களோட வாழ்ந்த விதம் பொறுத்து ...

ரெண்டு தலை முறைக்கு அப்புறம் உங்கள் பெர்யர் சொன்னால் யாருக்கும் தெரியாது அப்படி ஒருத்தர் இருந்தக்கு அடையாளம் என்று ஒன்னும் இருக்காது ...

எனவை ... நம்ம உயிர் நம்மலிடம் இருக்கும் வரை ... நல்லதை செய் .. நாலு பேர
சந்தோஷ படுத்து ... நல்ல வயிறு நெறைய ஏழைக்கு சோறு போடு ...
வேலை வேலை வேலை என்று மட்டும் சுற்றாமல் உங்கள் மனைவி, அம்மா, அப்பா, மக்கள்.    ( உங்கள் பிள்ளைகள்) , நெருங்கிய நண்பர்கள், தம்பி, அண்ணன், அக்கா, தங்கை ... எவர்களோட நேரம் ஒதுக்கு ... அன்பாய் இருக்கு நல்ல நினைவுகளை கொடு ... அன்பு காட்டு ... எக்ஸ்பிரஸ் யூர் லவ் .... என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு.... எக்ஸ்பிரஸ் செய்யாமல் .... நம்மளோட உன்னோட அன்பை கொண்டு செல்லாதே ! ....

நீ இறந்தால் ரெண்டு வாரம் தான் துக்கம் ... அப்பரும் வருடம் ஒருமுறை படையல் ... அதுவும் நீ இறந்த அன்று ..
உனோட நல்ல நினைவுகள்... நீ இல்லாத அந்த இடைவழியை குறைக்கும் ...

காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல ... அனைவரிடமும்
அன்பு செய் ... நீ இல்லாமலும் இருப்பாய் :-)

பி.கு - இந்த பதிவு சக்கரை சுரேஷ் அவருடையது .மொதல்ல இவரு காணாம போனாரு இப்ப அவரோட ப்லோகே காணாம போயிருச்சு ....

நன்றி
சுரேஷ்

16 June 2010

பரிணாமவளர்ச்சியும் கடவுளும்....


பரிணாமமும்

அதன்  வளர்ச்சியும்

உண்மையானால்

அது

ஒரு நாள்

கடவுளாக கூட

உருமாறும்

அப்போது

கடவுளிடம்

கேட்க தயாராக இருங்கள்

மதத்தையும்

ஜாதியையும்

உருவாக்கியது

யார் என்று ???


01 June 2010

புலம்பலாமா?


      என்னங்க நல்லா இருக்கீங்களா?
இது நாம் அடிக்கடி கேட்கும் கேள்விதான். இதற்கு நம்மில் எத்தனை பேர் மலர்ந்த முகத்தோடு நன்றாக இருக்கிறேன் என்று பதில் சொல்கிறோம்?
ஏதோ இருக்கிறேன் ...
என்னத்தே, நான் நல்லா இருந்து...
இப்படிச் சுரத்தையில்லாத பதிலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மற்றவர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? கண்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? மற்றவர்கள் கண்படுவது நமக்குக் கெடுதல் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
காலையிலிருந்து மாலைவரை எதையாவது நினைத்துப் புலம்பிக் கொண்டே காலம் கழிப்பது சரிதானா?
சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றதுதானே, புலம்புவது அவ்வளவு பெரிய குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆமாம், புலம்புவது உண்மையில் நம்முடைய எதிர்மறைச் சிந்தனைகளின் ஒரு வெளிப்பாடுதான்!
நமது துன்பமும் இன்பமும் பிறரிடமிருந்து வருவதில்லை. நாமே நமக்குள் வருவித்துக் கொள்வதான்.
நம்முடைய எண்ணம் போலத்தான் நம் வாழ்வும் அமையும்.
நல்ல எண்ணங்கள்தான் நல்ல செயல்களுக்கு வித்திடுகின்றன.
அவநம்பிக்கை, தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் சிந்தனைகள் நம்மை நிச்சயம் தோல்வியில்தான் கொண்டு ‍போய்சேர்க்கும்.
பல மாடிக் கட்டிடங்களுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கயிற்றில் நடக்கும் சாகசக்காரன் ஒருவன் இருந்தான். பல ஆண்டுகள் அனுபவம்... ஒரு நாள் சாகச நிகழ்ச்சியின் போது அவன் தவறி விழந்தான். பிழைக்கவில்லை.
அவன் மனைவி சொன்னாள் கடந்த சில நாள்களாகவே தவறி விழுந்து விடுவேனோ என்று ‍அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தவறி விழுந்து விடுவோம் என்ற எண்ணம் மேலோங்கி விட்டால் அவ்வளவுதான். நாம் தவறுவது உறுதி!
இதைத்தான் இன்று நடத்தையியல் வல்லுநர்கள் எதிர்மறை மனப்பாங்கு (Negative attitude) என்கிறார்கள்.
எப்போதும் ஒரு புன்னகை.. உற்சாகமான சிந்தனை... உற்சாகமான பேச்சு... உற்சாகமான செயல்கள்... சில நாள்கள் தொடர்ந்து இப்படிப் பேசிப் பழகிப் பாருங்கள்...
உங்கள் நம்பிக்கை வட்டமும் நட்பு வட்டமும் மளமளவென்று வளர்ந்துவிடும்!
நல்ல சிந்தனைகளை வளர்ப்போம். அது நல்ல ஆளுமைப்பண்பை (Character) உருவாக்கும்.

நல்ல ஆளுமைப் பண்பை வளர்ப்போம். ‍அது நமது வாழ்வை நிர்ணயிக்கும்.

கடவுள் பாதி! மனிதர் பாதி!


            நம் எல்லாரிடமும் இறைப் பண்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எல்லாரிடத்திலும் எல்லா நேரத்திலும் கடவுள் பண்பு வெளிப்படுவதில்லை.
மிக மிக மோசமானவர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவர்கள்கூட சில நேரங்களில் மிக அபூர்வமான செயல் திறனையோ, அன்பையோ காட்டி நம்மை அசத்தி விடுவார்கள்.


மிகப்‍பெரிய மகான்கள்கூடச் சில நேரங்களில் சாதாரண மனிதச் சபலங்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.
ஒவ்வொருவரிடத்திலும் இறைப் பண்புகளும் மனிதப் பண்புகளும் கலந்துதான் இருக்கின்றன.
இதை நாம் பணிவோடு ஒத்துக்கொள்ள வேண்டும். இதில் கேவலம் எதுவுமில்லை. இதற்கு நாம் மட்டும் தனிப்பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை.


நாம் விலங்கினங்களிலிருந்று படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள்தானே. நமது மூளையும் பரிணாம வளர்ச்சியில் விலங்கின மூளையிலிருந்து வளர்ந்து வந்ததுதானே!
விலங்கினத்திலிருந்து நாம் தனிப்பட்டு முன்னேறி வளரத்தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன.  சுமார் 400 தலைமுறைகள்தான் உருண்டோடி இருக்கின்றன.  இந்த 400 தலைமுறைகளில்தான் நாம் மொழி, நினைவாற்றல், பகுத்தறிவு, ஆன்மீகம் போன்ற திறன்களைப் படிப்படியாக வளர்ந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சிகள் தொடர்ந்தாலும் கூட நமது மூளையில் "முடிந்தால் மோது ""முடியாவிட்டால் ஓடு" என்ற சிந்தனைதான் ‍மேலோங்கி நிற்கிறது.  அச்சமும், அடக்கியாளும் வெறியும் அவசர முடிவெடுக்கும் போக்கும் இன்னும் நம்மை விட்டு விலகவில்லை.


மிகச் சிலரது அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டு, ஏராளமான நம்மைப் போன்ற அ‍டித்தள, நடுத்தட்டு வர்க்க மக்கள், கல்வி அறிவும், சிந்திக்கும் திறனும் இல்லாமல்தான் பல தலைமுறைகள் கழித்திருக்கிறோம்.
மூன்று தலைமுறைகளில்தான் கொஞ்சம் விடுதலைக் காற்றும், கல்வியும், நமது வாழ்க்கைப் போக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்திருக்கிறது.  அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்று, வாழ்க்கைத் தரம் உயர உயர நமது வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பக்குவமடையும்.
மேலை நாடுகள் இந்த வகையில் நிறைய முன்னேறிவிட்டன. அங்கே ஏமாறுபவர்கள் குறைவு எனவே, ஏமாற்றும் வாய்ப்பும் குறைவு. அஞ்சுபவர்கள் குறைவு, எனவே அடாவடித்தனங்களும் குறைவு.


நம்முடைய தமிழகச் சூழலும் இன்று இவ்வகை மாற்றங்களைச் சந்திக்கிறது. நமது வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது.
நாம் ஒவ்வொரும் படிப்படியாக முயன்றால் மனித பலவீனங்களிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழலாம்.


வாழப் பழகுவோம் தொடரும்...