29 October 2010

பள்ளிக்கூட ஜோக்ஸ்...



ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!



***********************************************************************************
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.

மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...

ஆசிரியர்: ?????

ந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க ப‌ரீ‌ட்சை‌க்கு‌ப் போகு‌ம் போது இ‌ப்படி எ‌ல்லா‌ம் சொ‌ல்‌லிடா‌தீ‌ங்க.. 

பாட்டி நான் பரிட்சைக்குப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.

நல்லா பாத்து எழுதிட்டு வாடா.

சரி பாட்டி. நீ சொன்னபடியே செய்றேன்



***********************************************************************************
நா‌ன் ஒ‌வ்வொரு பொருளாக‌ச் சொ‌ல்லு‌ம் போது அது எ‌ன்ன வகை எ‌ன்று சொ‌ல்ல வே‌‌ண்டு‌ம்?

ஆ‌சி‌ரிய‌ர் - த‌ண்‌ணீ‌ர் 
மாணவ‌ன் - ‌திரவ‌ம்
ஆ‌சி‌ரிய‌ர் - மாடு 
மாணவ‌ன் - ‌வில‌ங்கு 
ஆ‌சி‌ரிய‌ர் - தே‌ள்
மாணவ‌ன் - ‌‌திரவ‌ம் 
ஆ‌சி‌ரிய‌ர் - எ‌ன்ன தேள் ஒரு திரவப் பொருளா எப்படி?
மாணவ‌ன் - அது தான் ‘கொட்டுமே’.




3 comments:

  1. இப்படியெல்லாம் பதிவு போட்டா நீங்க ஸ்கூல் படிச்சவர்னு நாங்க நம்பிடுவோமாக்கும்??

    ReplyDelete
  2. ரொம்ப நாளா அந்த கார்லயே சாஞ்சி நிக்கிறீங்களே, கார் ஓனர் வண்டிய அங்கேயே விட்டுட்டு போயிட்டாரா?

    ReplyDelete