30 October 2010
29 October 2010
பள்ளிக்கூட ஜோக்ஸ்...
ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!
***********************************************************************************
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்: ?????
நம்ம பிள்ளைங்க பரீட்சைக்குப் போகும் போது இப்படி எல்லாம் சொல்லிடாதீங்க..
பாட்டி நான் பரிட்சைக்குப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.
நல்லா பாத்து எழுதிட்டு வாடா.
சரி பாட்டி. நீ சொன்னபடியே செய்றேன்
***********************************************************************************
நான் ஒவ்வொரு பொருளாகச் சொல்லும் போது அது என்ன வகை என்று சொல்ல வேண்டும்?
ஆசிரியர் - தண்ணீர்
மாணவன் - திரவம்
ஆசிரியர் - மாடு
மாணவன் - விலங்கு
ஆசிரியர் - தேள்
மாணவன் - திரவம்
ஆசிரியர் - என்ன தேள் ஒரு திரவப் பொருளா எப்படி?
மாணவன் - அது தான் ‘கொட்டுமே’.
27 October 2010
பனி மூட்டங்களா? பாறைகளா?
ஓவ்வொரு தனி
மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம்! அவற்றை நம் முன்னேற்றத்துக்குத்
தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை. எந்தக் குறையையும் வென்று
காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.
ஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மில் எத்தனை பேர் மயங்குகிறோம்!
புகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்?
கடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்! கொள்ளைகள், உயிர்ப் பலிகள்.
பேயும்
பூதமும் எங்கே இருக்கின்றன? கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே
இருக்கின்றன? ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்?
ஏமாற்று வித்தைகள்?
கடவுள்
நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம்? ஒரு நிமிடத்தை இழந்து விட்டால்
அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா? நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு
நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
ஜாதகம்,
ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம்?
எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று
வீணடிக்கிறோம்?
நம்
தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா? தம் பிழைப்பிற்கே வழியில்லாமல்
ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும்
நிர்மாணிப்பதா?
இன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்?
உங்கள்
பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை
எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும்
ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா?
மோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள்! வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன!
வாழ்நாளின்
சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம்! அந்த வீட்டை, வாஸ்து
சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி
ஆக்குகிறார்கள்!
இந்த
வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன! நவீன அறிவியலின் எல்லாக்
கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப்
பார்க்கிறார்கள்!
ஏமாறுவதும்! ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்!
சரி! நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை! இந்த வகைப் போலிகளும் தடையில்லை!
25 October 2010
நம் வாழ்வு யார் கையில்..
நடந்து போகும்போது கீழே விழுகிறோம். ஏன் என்று கேட்கிறார்கள்? என்ன சொல்வோம்?
கல் தடுக்கி விட்டது என்கிறோம். கல் மீது தான் பழி, நான் கல்லைக் கவனிக்காமல் இடறி விழுந்தேன் என்று சொல்கிறோமா? நாம் பொறுப்பை ஏற்கிறோமா?
சமையல் சரியில்லை. ஏன்? உப்பு கூடிவிட்டது என்கிறோம். நான் உப்பைக் கூடுதலாகப் போட்டு விட்டேன் என்று சொல்வதில்லையே!
மாணவர் தேர்வில் தோற்கிறார். ஏன்? வினாத்தாள் கடினமாக இருந்தது என்கிறார். நான் சரியாகப் படிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதில்லை.
இரண்டு வகைப் பதில்களும் ஒன்றுதானே என்று சிலர் நினைக்கலாம். இல்லை!
முதல் வகை பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சி. தவறுகளை, குறைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதன் வெளிப்பாடு!

சின்னச் சின்னத் தவறுகளுக்குக்கூட நாமே பொறுப்பேற்றுக் கொள்ளப் பழகுவோம்! ஒவ்வொரு சிறு சிறு தவறையும் திருத்திக்கொள்ள வழி இருக்கிறது.
படிப்படியாக நமது பலவீனங்கள் குறையும். பலங்கள் பெருகும். மெல்ல மெல்ல நாம் உயர வழி கிடைக்கும்.
நம்முடைய வாழ்க்கைப் பயணத்திலும்கூட இந்த இருவகை மனப்போக்கையும் பார்க்கலாம்.
சிலர் எப்போதும் புலம்புவார்கள்.
நான் மட்டும் கொஞ்சம் வசதியாகப் பிறந்து இருந்தால்..
என்னை மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படிக்க வைத்திருந்தால்...
அந்த வேலை மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...
என் மனைவி மட்டும் கொஞ்சம் உருப்படியாக வாய்த்திருந்தால்..
இப்படிப்பட்ட சிந்தனைகளே நமது தோல்வியை ஒப்புடக கொள்வதின் அடையாளம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்று சொல்லும் வாக்குமூலம்!
நம் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழிபோடும் முயற்சியின் வெளிப்பாடு மற்றவர்கள் கையில் நம் வாழ்வை ஒப்படைக்கும் அவலத்தின் அடையாளம்.
நமக்குள்ளே இறைவன் தந்திருக்கும் அந்தப் பேராற்றலை நம்பாமல் ஏற்றுக்கொள்ளாமல், பயன்படுத்தாமல் கோட்டை விட்டுவிட்டுப் பரிதவிக்கும் ஏமாறித்தனம்.
கடைசியில் நம் தோல்விக்குக் கடவுள்மீது பழிபோடும் அறியாமை! எனவே நம்முடைய வாழ்வு, நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு கொடை. மிகப்பெரிய வாய்ப்பு. அதை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டாம்.
நம் வாழ்வுக்கும், நம் வெற்றிக்கும், நம் மகிழ்ச்சிக்கும் நாமே பொறுப்பெடுத்துக் கொள்வோம்.
குறைகளை ஏற்றுக்கொள்வோம்... திருந்துவோம்.. முன்னேறுவோம் நம்முடைய தோல்விக்கும் குறைகளுக்கும் மற்றவர்கள்மேல் பழிபோடும் வழக்கத்தை இன்றே விட்டொழிப்போம்.
15 October 2010
Subscribe to:
Posts (Atom)