நம்மை நமக்கே பிடிக்குமா? இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று பலரும் நினைக்கலாம்.
ஆனால் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பாருங்கள். நம்மை நமக்கு முழுமையாகப் பிடிப்பதில்லை.
நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை.
நான் உயரமாக இல்லை.
நான் கருப்பாக பிறந்து தொலைந்து விட்டேன்.
நான் இன்னும் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கலாம்!
எனக்கு அவனைப் போல் படிப்பு வருவதில்லை..
என் முடி மட்டும் ஏன் கொட்டிப் போகிறது?
இப்படி எத்தனையோ புகைச்சல்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
நம்மீது நாமே தேவையில்லாமல் வளர்த்துக் கொண்டே வரும் இந்த வெறுப்புகள் காலப்போக்கில் பூதாகரமான எதிர்மறைச் சிந்தனைகளுக்கு வித்திடுகிறது.
நம்மை ெவறுக்கும் நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களை வெறுக்கிறோம். பெற்றோரை, பிள்ளைகளை வெறுக்கிறோம். சமூகத்தை வெறுக்கிறோம்.
வாழ்க்கையையே வெறுத்துத் தற்கொலை வரை பயணிக்கிறோம்.
ஆனால் நாம் நம்மை வெறுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
நாம் ஒவ்வொருவரும் உண்மையில் ஓர் வித்தியாசமான அற்புதமான படைப்பல்லவா? கடவுளின் ஒரு வித்தியாசமான வெளிப்பாடு அல்லவா?
நம்மைப் போன்றே எல்லாவிதத்திலும் ஒத்து அமைந்த மற்றொரு பிறவி இருக்கிறதா?
இரட்டைக் குழந்தைகள்ககூடக் காலப்போக்கில் வளரும் சூழலில் மாறுபட்டு போவதில்லையா?
ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பதும் செயல்படுவதும்தானே உண்மையில் இயற்கையின் அழகு. உயிர்ப் படைப்பின் சிறப்பு.
எல்லாரும் ஒரே மாதிரியாக, ஒரே வகையான உயரத்தில், நிறத்தில் வாழும் ஒர் உலகைக் கற்பனை செய்து பார்ப்போம்.
அந்த எந்திரமயமான உலகமும் வாழ்க்கையும் உங்களுக்குப் பிடிக்குமா? அந்த எத்திரங்களில் ஒன்றாக நாமிருந்தால் வாழ்க்கை
எப்படி இருக்கும்?
நாம் எந்திரங்கள் இல்லை. வித்தியாசமான இயற்கைப் படைப்புகள். ஒவ்வொருவரும் அற்புதமான ஒரு படைப்பு. இயற்கையின் ஓர் அங்கம். இறைவனின் ஒரு கொடை! ஏன்? இறைவனின் ஒரு வெளிப்பாடு.
இந்த வாழ்க்கைப் பாடத்தை நாம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருவோம். நாம் குறைபாடுகள் நிறைந்தவர்கள் என்று கருதி வருத்தத் தேவையில்லை.
நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் என்று உணர்ந்து மகிழ்வோம்.
நம்மை நாமே எக்காரணத்துக்காகவும் வெறுக்க வேண்டாம்.
நமது நிறத்தை, உயரத்தை, வடிவத்தை, தலைமுடியை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்!.
நம்மைப் போலத்தான் மற்றவர்களும். எனவே அவர்களின் வேறுபாடுகள் வித்தியாசங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
நம்மையும், நம் சுற்றத்தினரையும், சூழலையும் காதலிக்கப் பழகுவோம்.
வாழப் பழகுவோம் புத்தகத்தில் இருந்து சுட்டது நன்றி வேலன்.பாதொடரும்...
நல்லது...
ReplyDeleteஹெலோ , அந்த பொண்னோட போன் நம்பர் கிடைக்குமா , சும்மா அவுக ஊர்ல மழை எல்லாம் கரக்டா பெயுதான்னு கேட்கத்தான்.
ReplyDeleteஅஹமது இர்ஷாத்
ReplyDeleteவருகைக்கு நன்றி !!!!//
மங்குனி அமைச்சர் எனக்கே தரல இதுல நீங்கவேற