22 March 2010

படித்ததில் பிடித்த கவிதை வரிகள்


சாருமதியின் "சுனி ஒரு கலகக்காரி" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள்





 





சீதையைப் பாயச் சொன்னான்

தீயுக்குள் இராமன்

தனக்கும் அந்த


நியாயத்தைப் பிரயோகிக்காமல்.


மாதவியும்

மனிதப் பிறவி தானே!

கானல் வரி பாடி

அவளை

வேசை யென்று சொல்லி

விட்டு விலகிப் போன

கோவலன் மட்டு மென்ன

கற்புக்கு அரசனா?



அண்மையில் "வெற்றியின் பக்கம்"  என்ற ப்ளோகில் இந்த கவிதையை வாசித்தேன் கவிதையை அடைய இங்கு க்ளிக் பண்ணுங்க

7 comments:

  1. இந்த கவிதையில் சில வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன் அவை

    //இந்திரனுக்கு ஏமாந்தவள்
    அகலிகை மட்டும் தானா?
    இல்லையே!
    தபோமுனியும்
    தவறிழைத்தான் தானே?
    ஆனால்,
    தண்டிக்கப் பட அகலிகை
    தண்டிக்கக் கெளதமன்
    இது என்ன நியாயம்?//

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு தல!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நன்றி வால்பையன்!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி..!
    -
    லீனா மணிமேகலையின் ஒரு கவிதை:

    ...பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
    யேசு அல்லா இந்திரன் வர்ணன்
    சூரியன் கருப்பசாமி அய்யனார்
    ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
    யாவும்
    கலைக்க முயன்றும்
    என் சூலகத்தில்
    தங்கிவிட்ட கருக்கள்
    அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
    ராக்கெட்டோ கன்னிவெடியோ
    எறியப்படும் குண்டுகளுக்கு
    உடல் செத்தாலும்
    யோனிக்கு சாவில்லை
    யோனியிலும் சாவில்லை.

    முழுக்கவிதையும் காண: http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post.html.
    **
    நீங்கள் பகிர்ந்த கவிதையின் நீட்சியாக, நவீனமாக லீனாவின் கவிதையை உணர்கிறேன்.

    ReplyDelete
  5. ஜெகநாதன் சார் முதலில் எனக்கு இந்த தளத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  6. நீங்கள் அறிமுகப் படுத்திய கவிதை அருமை,வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  7. hai mythees,

    thanks for your comments, surely let you know some good books to you...

    ReplyDelete